News November 17, 2024
இவங்க சொல்றது சரிதானே..?

‘ஹாரிபாட்டர்’ புகழ் எம்மா வாட்சன் கூறும் கருத்துகள் பல விஷயங்களை கற்றுத்தருகிறது. பிராண்டட் இல்லாத, விலை குறைவான உடைகளை அணிவதால் நீங்கள் ஏழை என்று அர்த்தம் இல்லை. உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் செலவழிக்க வேண்டும். மற்றவர்களை கவர்வது உங்கள் வேலை அல்ல. உண்மையான செல்வம் என்பது நாம் அணியும் அடையாளங்களில் இல்லை. நாம் வாழும் வாழ்க்கையில் உள்ளது என்பது இவரது கருத்து. இவங்க சொல்றது சரிதானா மக்களே?
Similar News
News December 12, 2025
FLASH: வெள்ளி விலை ஒரே நாளில் ₹6,000 உயர்ந்தது

<<18540317>>தங்கமும்<<>>, வெள்ளியும் போட்டி போட்டுக் கொண்டு விலை உயர்ந்து வருகின்றன. இன்று(டிச.12) ஒரே நாளில் பார் வெள்ளி கிலோவுக்கு ₹6,000 அதிகரித்துள்ளது. இதனால், 1 கிராம் ₹215-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,15,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் இந்திய சந்தையில் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.
News December 12, 2025
அடுத்தமுறை டாக்டர் Prescription பார்த்தால், இத கவனியுங்க!

டாக்டர் Prescription கொடுத்தால், அதிலிருக்கும் பல Short form வார்த்தைகள் என்னவென்றே புரியாது. ஆனால், இனி அந்த கவலை வேண்டாம்.. இவற்றை ஞாபகம் வெச்சிக்கோங்க: ◆Dx- Diagnosis (நோய் கண்டறிதல்) ◆Rx- Prescription (மருந்துக்குறிப்பு) ◆Tx- Treatment (சிகிச்சை) ◆Sx- Surgery (அறுவை சிகிச்சை) ◆Hx- History (மருத்துவ வரலாறு) ◆Fx- fracture (எலும்பு முறிவு). இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News December 12, 2025
தேர்தல் பணிகளை ஆலோசிக்க தமிழகம் வரும் அமித்ஷா

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில் தமாகாவை தவிர வேறு கட்சிகள் இதுவரை இணையவில்லை. இதனிடையே நேற்று EPS-ஐ சந்தித்து ஆலோசனை நடத்திய நயினார் நாகேந்திரன், கள நிலவரத்தை தலைமையிடம் விளக்க நாளை டெல்லி செல்கிறார். இந்நிலையில் வரும் 15-ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகிறார். அப்போது கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.


