News October 1, 2025

மாணவர்கள் பின்தொடரும் நபர் சரியானவரா? வெற்றிமாறன்

image

மாணவர்கள் யாரை பின்தொடர வேண்டும், அவ்வாறு பின்தொடரும் நபர் சரியானவரா என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்று வெற்றிமாறன் அறிவுறுத்தியுள்ளார். கல்லூரி விழா ஒன்றில் பேசிய அவர், மனிதன் ஒரு Socio-political animal என்பதை சரியாக புரிந்து, நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்றும் பகுத்தறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். கரூர் துயரம் சம்பவம் நடந்துள்ள நிலையில், இவ்வாறு அவர் கூறியது கவனிக்கத்தக்கது.

Similar News

News December 10, 2025

கூட்டணிக்கு EPS-தான் தலைவர்

image

NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக EPS-ஐ அங்கீகரித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் முழுவதும் EPS-க்கு வழங்கப்படுகிறது எனவும், கூட்டணிக்கு மேலும் சில புதிய கட்சிகள் வரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

CM-ஐ தூங்கவிடாமல் செய்யும் EPS: செம்மலை

image

அரசியலில் எதிரிகள், துரோகிகளின் விமர்சனங்களை கடந்து செல்லும் EPS-யிடம் அசாத்திய துணிச்சலை பார்ப்பதாக செம்மலை கூறியுள்ளார். ஆளுங்கட்சி திட்டமிட்டு அதிமுகவை பலவீனப்படுத்துவதாக கூறிய அவர், பொதுக்குழு கூட்டத்தில் EPS-ன் உரையால் கட்சிக்கு உத்வேகம் பிறக்கும் எனவும் பேசியுள்ளார். தூங்காமல் களப்பணிகளை செய்துவருவதாக CM கூறுவது பொய் எனவும், EPS தான் CM-ஐ தூங்கவிடாமல் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

BREAKING: அதிரடி மாற்றம் செய்தார் EPS

image

அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக EX அமைச்சர் KP முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்மகன் உசேனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள KP முனுசாமி, EPS மீது அதிருப்தியில் உள்ளதாக அண்மைக் காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!