News June 17, 2024

மோடி தமிழக வருகை ரத்துக்கு சபாநாயகர் தேர்தல் காரணமா?

image

பிரதமரின் தமிழக பயணம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 24இல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் வேட்பாளரை நிறுத்தினால்,
INDIA கூட்டணி ஆதரவு தெரிவிக்கும் என்று கூறியுள்ளதால், NDA கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற மோடி இந்த பயணத்தை ஒத்திவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News

News January 13, 2026

கள்ளக்குறிச்சி:ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு கிளிக் செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 13, 2026

பொங்கல் பண்டிகை.. தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் 1,03,123 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இவர்களுக்கு சாதனை ஊக்கத் தொகையாக ₹85 – ₹625 வரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பொங்கல் பண்டிகைக்கு ₹3,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News January 13, 2026

கூட்டணிக்காக பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை: TTV

image

NDA கூட்டணியில் இணையலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் <<18846855>>TTV <<>>இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கூட்டணி விவகாரத்தில் அமமுகவுக்கு எந்த அழுத்தமோ, தயக்கமோ, குழப்பமோ இல்லை என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று உறுதிப்படுத்திய TTV, கூட்டணிக்காக பாஜக அழுத்தம் கொடுப்பதாக பொய் பரப்புரை மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

error: Content is protected !!