News August 7, 2024
விராட் கோலியின் வளர்ச்சிக்கு இவர்தான் காரணமா?

விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற பல இந்திய வீரர்கள் வளர்வதற்கு தோனி முக்கிய காரணமாக இருந்ததாக இந்திய அணியின் வீரர் ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார். இளம் வீரர்களை தங்களது சொந்த திட்டத்துடன் விளையாட தோனி அனுமதிப்பார் எனக் கூறிய அவர், தோனியின் ஆதரவு மட்டும் இல்லையென்றால் விராட், ரோகித் போன்றவர்கள் கூட அவர்களது ஆரம்ப காலத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்கள் எனக் கூறியுள்ளார்.
Similar News
News November 8, 2025
சிவப்பு ரோஜாவாக சிலிர்ப்பூட்டும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

விக்ரம் வேதா, இறுகப்பற்று படங்களில் கவனம் ஈர்த்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை போட்டோஷூட் பிரியர் என்றே சொல்லலாம். வாரத்திற்கு 2-3 முறை புது புதிதாக போட்டோக்களை SM-ல் பதிவிடுவார். இந்நிலையில், சிவப்பு நிறத்தில் சற்று கவர்ச்சிகரமான ஆடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதை SM-ல் அவர் பதிவிடவே சிவப்பு ரோஜாவாக சிலிர்ப்பூட்டுகிறீர்கள் என கமெண்ட் செய்கின்றனர். போட்டோக்களை SWIPE செய்து பார்க்கவும்.
News November 8, 2025
போனுக்கு அடிமையானால் இப்படித்தான் மாறுவீர்கள்!

ஒருவர் நீண்ட நேரமாக ஒரு இடத்தில் இருந்து நகராமல், போனையே பார்த்து கொண்டு இருந்தால், அவர் 25 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி உருமாறுவார் என்பதை WeWard எனும் ஆப், போட்டோவாக வெளியிட்டுள்ளது. WHO உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களிடம் தரவுகள் பெறப்பட்டு, AI மூலம் இந்த போட்டோ உருவாக்கப்பட்டுள்ளது. கூன் விழுவது, முடி உதிர்வது, – வயதுக்கு மீறிய தோற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
ONGC-ல் வேலை… விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ONGC-ல் 2,623 அப்ரென்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவ.6-ம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நவ.17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஐடிஐ, டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 18-24 வயதிற்கு உட்பட்டவர்கள் ongcindia.com என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணபிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


