News April 1, 2025
அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலைக்கு கல்தா?

2026 தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமையலாம் எனத் தகவல் வெளியாகி வருகிறது. அப்படி கூட்டணி அமைந்தால், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்கக்கூடாது என அதிமுக விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதனால் அண்ணாமலையை மாற்றிவிட்டு, அதிமுக தலைமைக்கு நெருக்கமான எல்.முருகன், நயினார் நாகேந்திரன் போன்றவர்களில் யாரேனும் ஒருவரை தலைவராக்க பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
Similar News
News January 21, 2026
புளிச்சக் கீரையை இவர்கள் சாப்பிடவே கூடாது.. ALERT!

புளிச்சக் கீரையில் நிறைய நார்ச்சத்துக்கள், ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன. இது HIGH BP, இதய பிரச்னை உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், சிலர் மட்டும் இதனை உண்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நலனை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.
News January 21, 2026
ஜன நாயகன் ரிலீஸ்.. காலையிலேயே ஹேப்பி நியூஸ்

‘ஜன நாயகன்’ பட சென்சார் சான்று தொடர்பான வழக்கை சென்னை HC தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. அதேநேரம், இன்று (அ) நாளை இதுதொடர்பாக தீர்ப்பு வெளியாகும் என விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த 2 நாள்களுக்குள் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அடுத்த வாரம் (அ) பிப்ரவரி 2-வது வாரத்தில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
News January 21, 2026
சர்க்கரையை விரும்பி சாப்பிடுவீங்களா?

டீ, காபி சொல்லும்போது, கொஞ்சம் Sugar Extra என சொல்பவரா நீங்க? இதை கொஞ்சம் படிங்க. அதிகப்படியான சர்க்கரை நுகர்வு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக எடை அதிகரிப்பதில் சர்க்கரைதான் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், சர்க்கரை இதயத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் புற்றுநோய், மனச்சோர்வு, கல்லீரல் கொழுப்பு போன்ற பிரச்னைகளும் வரலாம் என டாக்டர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


