News April 11, 2024

நடிகை ஷபானா கர்ப்பமாக இருக்கிறாரா?

image

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர். மனைவி மெகா தொடரின் நாயகி ஷபானா தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளிவந்தன. ஷபானா தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். “நான் கர்ப்பமானால் நிச்சயம் உங்களிடம் சொல்வேன். என்னுடைய வருங்காலத்திற்காக விலகுகிறேன்” என்று சமூக வலைதளங்களில் ஷபானா பதிவிட்டிருக்கிறார்.

Similar News

News November 13, 2025

FLASH: சம்பள உயர்வு… CM ஸ்டாலின் அறிவிப்பு

image

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான <<18275236>>அகவிலைப்படியை 3% உயர்த்தி<<>>, ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, டிசம்பரில் 5 மாத அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் வழங்கப்படும். இதன்மூலம், 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு ₹1,829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 13, 2025

ஆச்சரியம் ஆனால் உண்மை..!

image

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. நுண்ணுயிர்கள் முதல் சூரிய குடும்பம் வரை, நாளும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் இயற்கை அதிசயங்கள் ஏராளம். அந்த வகையில் வியப்பை ஏற்படுத்துவதாகவும், அதேசமயம் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை Swipe செய்து அவற்றை பாருங்கள். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News November 13, 2025

விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி… முடிவை அறிவித்தார்

image

திமுக, பாஜக கட்சியை தவிர பிற கட்சிகளுடன் கூட்டணிக்கு ரெடி என தவெக முக்கியத் தலைவரான அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஆனால், தே.ஜ.கூட்டணியில் விஜய்யை இணைக்க திட்டமிட்டு இபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார். தவெகவை மனதில் வைத்தே ஜனவரியில் மெகா கூட்டணி அமையும் என அவர் அறிவித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். திமுகவை எதிர்க்கும் கட்சிகள் ஓரணியில் திரள விஜய் பச்சைக்கொடி காட்டுவாரா?

error: Content is protected !!