News April 13, 2024

IPL: அறிமுகமான முதல் போட்டியிலேயே அரைசதம்

image

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி வீரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் அதிரடி காட்டியுள்ளார். நேற்று தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய அவர், 2ஆவது பந்திலேயே சிக்சர் அடித்தார். குறிப்பாக, க்ருனால் பாண்டியா வீசிய 13ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து எதிரணியை திணறடித்தார். 2 Four, 5 Six என விளாசிய அவர், 35 பந்துகளில் 55 ரன்கள் குவித்து முதல் ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார்.

Similar News

News November 13, 2025

எல்லாரும் தீவிரவாதிகள் அல்ல: ஒமர் அப்துல்லா

image

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்ச்சியாக கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம்களாக உள்ளனர். இந்நிலையில், காஷ்மீரில் வாழும் அனைத்தும் முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல என்று அம்மாநில CM ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். டெல்லி தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், நாட்டின் அமைதியை குலைப்பதற்கென சிலர் உள்ளதாக குறிப்பிட்டார்.

News November 13, 2025

தமிழ் நடிகர் மரணம்.. நெஞ்சை உலுக்கிய சோகம்

image

‘கொள்ளி வைக்க ஒரு ஆள் வேண்டாமா?’ என்ற வார்த்தையின் வலியை அபிநய்யின் இறுதிச்சடங்கு உணர்த்திவிட்டது. இறுதிச்சடங்கு செலவை தாம் ஏற்க நேரிடுமோ என்ற எண்ணத்தில், உறவினர்கள் கூட இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லையாம். இப்படி ஒரு கொடுமையான முடிவா நமக்கு என்று அபிநய்யின் ஆத்மா எண்ணிய நேரத்தில், KPY பாலா உள்ளிட்ட சிலரின் முயற்சியால், தூரத்து உறவினர் ஒருவரை வரவழைத்து கொள்ளி வைத்துள்ளனர்.

News November 13, 2025

81.37% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள்: ECI

image

கடந்த நவ.4 முதல் தமிழகத்தில் SIR பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (நவ.13) மதியம் 3 மணி வரை 81.37% வாக்காளர்களுக்கு SIR கணக்கீட்டு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில், இதுவரை 5.21 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!