News March 20, 2024
ஐபிஎல் ‘Fans Park’ தேதி வெளியானது

2024 ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளதால், ஐபிஎல் ‘Fans Park’ என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பெரியத் திரையில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக காண BCCI சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் மார்ச் 22 (CSK – RCB) மற்றும் 23 (KKR – SRH) ஆகிய தேதிகளிலும், கோவை மாவட்டத்தில் மார்ச் 30 (LSG – PBKS) மற்றும் 31 (GT – SRH) ஆகிய தேதிகளிலும் ஒளிபரப்ப உள்ளது.
Similar News
News February 19, 2026
நடப்பு டி20 WC தொடரில் இமாலய சாதனை!

ஒரே உலகக்கோப்பை தொடரில் 3 சதங்கள் முதல்முறையாக அடிக்கப்பட்டு சாதனையாக பதிவாகியுள்ளது. நடப்பு டி20 WC-ல் இலங்கையின் பதும் நிசாங்கா(100), கனடாவின் யுவராஜ் சம்ரா (110), பாகிஸ்தானின் சஹிப்சதா பர்ஹான்(100) ஆகியோர் சதம் கண்டுள்ளனர். இதற்கு முன்பு எந்த டி20 WC தொடரிலும் 2 சதத்துக்கு மேல் பதிவானதில்லை. இந்நிலையில் நடப்பு தொடரில் இன்னும் 19 ஆட்டங்கள் மீதமுள்ளதால், மேலும் கூடுதல் சதங்களை எதிர்பார்க்கலாம்.
News February 19, 2026
L வடிவ மேம்பாலமா? W பள்ள மேம்பாலமா? அன்புமணி

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட<<19147672>> L வடிவ மேம்பாலம் <<>>மிக மோசமான தரத்தில் அமைக்கப்பட்டிப்பதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். அதில் பயணிக்கும் போது W வடிவத்தில் அமைக்கப்பட்ட பாலத்தில் பயணித்த உணர்வு தான் ஏற்பட்டதாகவும், ₹61 கோடி மதிப்பீட்டில் மக்கள் பணத்தைக் கொட்டி அப்பாலத்தை கட்டியதில் ஊழல்கள் நடந்ததா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News February 19, 2026
திமுக + விசிக + பாஜக + நாதக.. ஒன்றாக இணைந்தனர்

அரசியலில் மாறுபட்ட கொள்கைகளை கொண்ட 4 கட்சிகளின் சந்தித்தபோது எடுத்த செல்பி இணையத்தில் டிரெண்டாகிறது. ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட இந்த போட்டோவை நேற்று ‘முறுவலிக்கும் முரண்கள்’ என <<19177550>>திருமாவளவன் தனது X பக்கத்தில்<<>> பதிவிட்டார். அதன் பிறகு இப்போட்டோவை ஷேர் செய்யத் தொடங்கினர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இப்படி ஒரு அணி இணைந்தால் எப்படி இருக்கும் நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.


