News August 5, 2024

வங்க தேசத்தில் இடைக்கால ஆட்சி அமைகிறது

image

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், வங்கதேச ராணுவத்தின் உதவியுடன் இடைக்கால அரசு அமைந்துள்ளது. ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமானுடன், வங்கதேச தேசியவாத கட்சி இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டது. இதில் பிரபல எழுத்தாளர் சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமைய ராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது.

Similar News

News January 24, 2026

திமுக கூட்டணியில் தேமுதிக? பிரேமலதா சஸ்பென்ஸ்

image

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என கூறிய பிரேமலதா, இதுவரை கூட்டணி பற்றி அறிவிக்கவில்லை. இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது தொடர்பான கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத அவர், உரிய நேரத்தில் நல்ல முடிவெடுக்கப்படும் என்றார். மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு கால அவகாசம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஒரு அம்மாவாக தேமுதிகவிற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தனக்கு தெரியும் என்றும் பேசியுள்ளார்.

News January 24, 2026

தனிக்கட்சி தொடங்கி விஜய்யுடன் கூட்டணியா?

image

சமீபத்தில் வைத்திலிங்கம் தவெகவில் இணைந்து OPS-க்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்த வரிசையில் தற்போது OPS உடன் அரசியல் ஆலோசகராக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன், ’MGR அதிமுக’ என புதிய கட்சியை தொடங்கி தவெகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கூட்டணி தொடர்பாக OPS எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதால் எரிச்சலடைந்த இவர் இம்முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

News January 24, 2026

பூத் நிலை அலுவலர்களுக்கு ECI எச்சரிக்கை

image

SIR பணிகளில், வாக்காளர் பட்டியலின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை பாதிக்கப்படக்கூடாது என மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கு ECI உத்தரவிட்டுள்ளது. SIR பணிகளில் தவறு நடந்தால் பூத் நிலை அலுவலர்களை (BLO) இடைநீக்கம் செய்வதோடு துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், குற்றச்செயல் தொடர்பான வழக்குகளில் FIR பதிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!