News April 10, 2024

காங்கிரஸில் தீவிரமடையும் உட்கட்சி மோதல்

image

நெல்லை மக்களவைத் தொகுதி களநிலவரம் குறித்து அக்கட்சித் தலைமைக்கு நாங்குநேரி காங்கிரஸார் பரபரப்பு தகவல் அளித்துள்ளனர். அதில், நெல்லையில் ராபர்ட் புரூஸ் தோற்றால் நாங்கள் பொறுப்பல்ல என்றும், ராபர்ட் புரூஸ் தோற்பதற்கான வேலைகளை ரூபி மனோகரன் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இது நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 17, 2025

வீட்டை கோயிலாக்கும் மார்கழி கோலங்கள்!

image

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய தத்துவம், பச்சரிசி மாவில் போடும் கோலங்களால் உயிர்பெறுகிறது. எறும்புகளுக்கும், சிறு உயிர்களுக்கும் உணவளிக்கும் இந்த உன்னத அறத்தை மார்கழி மாதத்தில் பின்பற்றுவது கூடுதல் சிறப்பு. இதனால் வீட்டில் செல்வம், செழிப்பு பெருகும் என நம்பப்படுகிறது. அப்படியாக, மார்கழியில் போடக்கூடிய கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். SWIPE செய்து பார்க்கவும்.

News December 17, 2025

3 மணி நேரம் 6 நிமிடங்கள்.. சரியான முடிவா?

image

இரண்டரை மணி நேர படங்களே Length ஜாஸ்தி என்ற விமர்சனத்தை பெறும் சூழலில், ஜனநாயகன் 3 மணி நேரம் 6 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது. 3 மணி நேரத்தை கடந்த Runtime கொண்ட புஷ்பா 2, அனிமல் படங்கள் வெற்றி பெற்றாலும், ஜனநாயகனுக்கு ரிஸ்க்தான் என்ற சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். நேற்று சென்சாருக்கு அனுப்பப்பட்ட படத்தின் Final Output ரெடியாகாத சூழலில், இதை கவனிப்பார்களா விஜய்யும், ஹெச். வினோத்தும்?

News December 17, 2025

6 குழந்தைகளுக்கு HIV: மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

image

ம.பி., சத்னா மாவட்ட ஹாஸ்பிடலில், தாலசீமியாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 குழந்தைகளுக்கு HIV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. <<18106277>>ஜார்கண்ட்<<>> போல, இங்கேயும் குழந்தைகளுக்கு HIV தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், விரைந்து நடவடிக்கை எடுக்க பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!