News November 17, 2024

இந்தியாவின் மாஸ்டர் Stroke: அதிர்ந்த உலக நாடுகள்

image

உலக நாடுகளை அதிரவைக்கும் நிகழ்வாக இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை டாக்டர் APJ அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக நேற்று நடத்தியுள்ளது. 1500 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய, இந்த ஏவுகணையின் வேகம் 6,125 km/h (Mach 5) மற்றும் 24,140 km/h (Mach 20) வரை இயங்குகிறது. இந்த சோதனை அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 8, 2025

திருப்பூரில் இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பூர் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் மாநகர போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இன்றைய தினம் காவல் உதவி ஆணையர் கணேசன் தலைமையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விபரம் சமூக வலைதளத்தில் மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 8, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (டிச.8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News December 8, 2025

போராட்டத்துக்கு அனைத்து கட்சிகளையும் அழைத்த பாமக

image

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வரும் 17-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், சமூக அமைப்புகளுக்கும் அன்புமணி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அதில் சமூகநீதியில் அக்கறை கொண்ட தாங்களும் போராட்டத்தில் பங்கேற்று சமூகநீதியை பாதுகாக்க ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளர்.

error: Content is protected !!