News July 13, 2024
புதிய வரலாறு படைத்த இந்திய அணி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான T20 போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. அதன்படி, 20 ஓவர் போட்டிகளில் இலக்கை துரத்திய இந்திய அணி, 28 பந்துகள் மீதமிருக்க விக்கெட் இழப்பின்றி எடுத்த அதிகபட்ச ரன் (156) இதுவாகும். இதற்குமுன், பாகிஸ்தான் 200 (இங்கிலாந்துக்கு எதிராக), இங்கிலாந்து 169 (இந்தியாவுக்கு எதிராக) விக்கெட் இழப்பின்றி இலக்குகளை எட்டியுள்ளன.
Similar News
News July 9, 2025
திருமணத்தடை, குழந்தை பாக்கியம் தரும் விநாயகர்

ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் அமைந்துள்ள வெயிலுகந்த விநாயகர் கோயிலில், தட்சிணாயனத்தில் தெற்கிலிருந்தும், உத்தராயனத்தில் வடக்கிலிருந்தும் மூலவர் விநாயகர் மீது சூரிய வெளிச்சம் படுகிறது. பக்தர்கள் அபிஷேகம், வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறப்பு ஆகியவை இங்கு பிரார்த்தனை செய்தால் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். *SHARE IT*
News July 9, 2025
காதலியை ஐபிஎஸ் ஆக்க இப்படி ஒரு வழியா?

வடமாநிலங்களில் வேண்டுதலுக்காக பக்தர்கள் கங்கை நீர் காவடி சுமக்கும் வழக்கம் உண்டு. அப்படி ஹரித்துவாரில், காவடியில் இருபுறமும் கங்கை நீரை சுமந்துகொண்டு வந்த இளைஞர் கவனம் ஈர்த்துள்ளார். அவரின் வேண்டுதல் என்ன தெரியுமா? அவரின் காதலி இப்போதுதான் பிளஸ் டூ முடித்துள்ளாராம். அவர் படித்து ஐபிஎஸ் ஆகும்வரை கங்கை காவடி தூக்குவதாக வேண்டுதலாம். ஐபிஎஸ் ஆனபின் அப்பெண்ணை கல்யாணம் செய்துகொள்வாராம்.
News July 9, 2025
20 மாவட்டங்களில் இரவு மழை: IMD

இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சி, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். அதேபோல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமாம்.