News July 16, 2024
புதிய உச்சத்தை பதிவு செய்த இந்திய பங்குச்சந்தை

மத்திய பட்ஜெட் நெருங்கும் சூழலில், இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய வர்த்தக நேரத்தில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 50 புள்ளிகள் அதிகரித்து, 24,616 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதே போல, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 52 புள்ளிகள் அதிகரித்து, 80,716 புள்ளிகளுடன் புதிய உச்சத்தில் நிறைவடைந்தது.
Similar News
News July 10, 2025
நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

*என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். *மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல – உங்களை நீங்களே மாற்றிக் கொள்வது. *பின்னால் இருந்து வழிநடத்துங்கள் – மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.*இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.
News July 10, 2025
கனிமொழி, உதயநிதி எங்கே? திருப்புவனத்தில் சீமான் கேள்வி

இளைஞர் அஜித்குமார் மரணத்தை கண்டித்து திருப்புவனத்தில் நாதகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பேசிய சீமான், காவல் மரணமடைந்த பெனிக்ஸ், ஜெயராஜ் வீட்டுக்கு சென்ற உதயநிதியும், கனிமொழியும் ஏன் அஜித்குமார் வீட்டுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார். அப்போது அவர்கள் எதிர்கட்சியாக இருந்ததால் ஜெயராஜ் வீட்டுக்கு சென்றனர். இப்போது ஆளுங்கட்சி என்பதால் அஜித்குமார் வீட்டுக்கு செல்லவில்லை என விமர்சித்தார்.
News July 10, 2025
ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை அடுத்து, ஆளுநர் மாளிகை வளாகத்தில் போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.