News August 8, 2025

இந்திய அரசு vs எலான் மஸ்க்.. வெல்வது யார்?

image

மத்திய அரசின் சஹ்யோக் போர்டலை எதிர்த்து எலான் மஸ்கின் X, கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அரசிற்கு எதிரான விமர்சனங்கள், கேலிப் பதிவுகளை நீக்கச் சொல்லி அந்த போர்டல் வற்புறுத்துவதாகவும், இதனால் கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு, இணைய தணிக்கை நடைபெறுவதாகவும் X குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், சட்டவிரோத, தீங்கு விளைவிக்கும் கருத்துக்களை நீக்க அந்த போர்டல் அவசியம் என மத்திய அரசு வாதிடுகிறது.

Similar News

News August 8, 2025

என் நாட்டை பற்றி முடிவு செய்ய டிரம்ப் யார்? சீமான் கேள்வி

image

டிரம்ப்பின் வரிவிதிப்பு பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு நாட்டை கொண்டு செல்லும் என சீமான் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க ஒரே நாட்டைச் சார்ந்திருப்பது போராபத்து எனவும், என் நாடு என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க டிரம்ப் யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சென்னையில் துப்புறவு தொழிலாளர்கள் பல நாள்கள் போராடி வருவதுதான் தமிழக ஆட்சியின் அவ லட்சணம் எனவும் சாடியுள்ளார்.

News August 8, 2025

மாணவர்களுக்கு இ-மெயில் உருவாக்கி தர ஆணை

image

9 முதல் 12 வரை உள்ள மாணவர்களுக்கு இ-மெயில் உருவாக்கி தர தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் சான்றிதழ் படிப்புகள், போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல் என அனைத்து செயல்பாடுகளுக்கும் இ-மெயில் தேவைப்படுகிறது. அதனால் மாணவர்களுக்கு இ-மெயில் உருவாக்கி, அந்த முகவரியை ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News August 8, 2025

ஆடி வெள்ளியுடன் வரும் பெளர்ணமி

image

ஆடி மாதத்தின் 4ம் வெள்ளியான இன்று பெளர்ணமி திதியும் சேர்ந்து வருகிறது. ஆகையால் இன்றைய தினத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி பெருகும் என்பது ஐதீகம். சிவனுக்கு பாலபிஷேகம் செய்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் சிவ பெருமானின் அருள் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என நம்பப்படுகிறது.

error: Content is protected !!