News January 15, 2025
ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுத்த இந்தியா

கேரளாவைச் சேர்ந்த பினில் என்பவர், ரஷ்யாவில் ராணுவ சேவை செய்த போது உயிரிழந்தார். இதனையடுத்து அங்கு ராணுவத்தில் பணியாற்றும் 64 இந்தியர்களை உடனடியாக தாயகத்திற்கு அனுப்ப ரஷ்ய அதிகாரிகளிடம் இந்தியா அழுத்தமாக வலியுறுத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த பினிலின் உடலை இந்தியாவிற்கு அனுப்பவும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியுள்ளார்.
Similar News
News November 15, 2025
21 நாள்கள் இத சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க!

வாழைப்பழங்களிலேயே செவ்வாழைப்பழத்தில் தான் அவ்வளவு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனை 21 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் உண்டாகுமாம். கண் பார்வை மேம்படும், ஆண்மை குறைவு பிரச்னைகள் சரியாகும், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராகும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் காலை உணவோடு செவ்வாழையை சாப்பிடுங்கள். அனைவருக்கும் SHARE THIS.
News November 15, 2025
சற்றுமுன்: தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $105 குறைந்து $4,080-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (நவ.14) தங்கம் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்து, ₹93,920-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 15, 2025
பிஹார் CM நிதிஷ்குமார் இல்லையா?

பிஹாரில் <<18291958>>NDA கூட்டணி<<>> வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, நிதிஷ்குமார் பிஹார் CM ஆக இருந்தார், இருக்கிறார், தொடர்ந்து இருப்பார் என JD(U) கட்சி, தனது X பக்கத்தில் பதிவிட்டது. ஆனால், பதிவிட்ட 10 நிமிடங்களிலேயே அந்த பதிவை டெலிட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதால், நிதிஷ்குமாருக்கு CM பதவி கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.


