News January 15, 2025

INDIA OPEN: வெற்றியுடன் தொடங்கிய சிந்து

image

இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில், வெற்றியுடன் தொடங்கியுள்ளார் பிவி சிந்து. முதல் சுற்றில் அவர் தைவானின் சுங் சுவோ யூனை 21-14, 22-20 என்ற புள்ளிகளில் வீழ்த்தினார். நீண்ட இடைவெளிக்கு பின் களமிறங்கிய சிந்துவுக்கு இப்போட்டி சவாலாகவே இருந்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்- சிராக் இணை, மலேசியாவின் மேன் வெய் சோங்- கை வுன் டீயை 23-21, 19-21, 21-16 என வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

Similar News

News December 9, 2025

நாளை முதல் அரையாண்டு தேர்வு.. மாணவர்களே ரெடியா!

image

தமிழகத்தில் நாளை(டிச.10) முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளன. 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு நாளை தேர்வுகள் நடக்க உள்ளன. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிச.15-ல் தேர்வுகள் தொடங்கும். டிச.23-ல் தேர்வுகள் நிறைவடைகின்றன. மாணவர்களே, *படிப்பதற்கு தேவையான நேரம் ஒதுக்குங்கள். *இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதை தவிருங்கள். *பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள். ALL THE BEST

News December 9, 2025

நாதகவில் இருந்து விலகல்.. புதிய கட்சி உதயம்

image

நாதக ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ளனர். மாவட்டச் செயலாளராக இருந்த கண்.இளங்கோ தலைமையில் ‘மேதகு நாம் தமிழர் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நாதக செயல்படவில்லை என குற்றஞ்சாட்டிய கண்.இளங்கோ, வெறுமனே பேசினால் மட்டுமே ஆட்சியை பிடித்துவிடலாம் என நாதக தலைமை நம்புகிறது என சாடியுள்ளார்.

News December 9, 2025

நார்த்தங்காயின் நன்மைகள்

image

நார்த்தங்காயில் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் சி & பி அதிகம் நிறைந்துள்ளது. நார்த்தங்காய் ஊறுகாய் போட மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நன்மைகளை தருகின்றன. அவை என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!