News April 13, 2024

300க்கும் அதிக தொகுதிகளில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி

image

மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி 300க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலுக்கு பிறகு மத்தியில் I.N.D.I.A. கூட்டணி ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார். மத்தியில் ஆள பாஜக கூட்டணிக்கு 10 ஆண்டுகள் மக்கள் வாய்ப்பு அளித்து விட்டனர், இதுவே அக்கூட்டணிக்கு போதுமானது என்றும் அவர் கூறினார்.

Similar News

News November 12, 2025

வரலாற்று சிறப்புமிக்க பிஹார் தேர்தல்: EC

image

பிஹார் தேர்தலானது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று EC ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக நடந்த SIR-ல் 7.5 கோடி வாக்காளர்கள், அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய 1,76,000 பூத் ஏஜென்ட் பங்கேற்றதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தேர்தல் பணியாளர்களின் அயராத முயற்சியால், பிஹாரில் உள்ள 38 மாவட்ட நீதிமன்றங்களில் SIR-க்கு எதிராக ஒற்றை புகார் கூட முறையீடு செய்யப்படவில்லை என்று பேசியுள்ளார்.

News November 12, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News November 12, 2025

வங்கதேசத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம்

image

வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பள்ளிகளில் P.E.T மற்றும் இசை பயிற்றுவிக்கும் கலைஞர்களின் பணி நியமனத்தை அரசு ரத்து செய்துள்ளது. பட்ஜெட் கட்டுப்பாடுகளே இந்த முடிவிற்கான காரணம் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவை இஸ்லாமியத்திற்கு விரோதமானது என்று இஸ்லாமிய குழுக்கள் கொடுத்த அழுத்தமே பணி நியமன ரத்துக்கு காரணம் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!