News August 22, 2024
IND Vs ENG: டெஸ்ட் தொடர் அட்டவணை வெளியீடு

IND Vs ENG அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணி, அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20இல் தொடங்குகிறது. 2,3,4,5 போட்டிகள் முறையே ஜூலை 2, 10, 23, 31 தேதிகளில் நடக்கிறது. இந்தியாவில் இரு அணிகளும் கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
Similar News
News November 10, 2025
SIR-க்கு எதிராக தமிழக காங்., மதிமுக வழக்கு

SIR-க்கு எதிராக தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஏற்கெனவே திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என SC அறிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களும் நாளை விசாரணைக்கு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News November 10, 2025
ஆதாரில் வரும் அதிரடி மாற்றம்.. கவனியுங்க மக்களே!

‘ஆதார் விஷன் 2032’ என்ற புதிய திட்டத்தின் கீழ், ஆதார் கார்டு சேவையிலும் AI தொழில்நுட்பத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 3 அதிநவீன தொழில்நுட்பங்கள் வரவுள்ளன ✦AI: மோசடிகளை குறைக்கவும் முடியும் ✦குவாண்டம் கம்ப்யூட்டிங்: எதிர்காலத்தில் வரக் கூடிய அச்சுறுத்தல்களில் இருந்து ஆதார் அமைப்பைப் பாதுகாப்பது ✦பிளாக்செயின்: தரவுகள் சரிபார்ப்பை பாதுகாப்பானதாக மாற்ற உதவும் என கூறப்படுகிறது.
News November 10, 2025
வெள்ளி விலை இன்று ₹2,000 உயர்ந்தது

வெள்ளி மீண்டும் விலை உயர்வைக் கண்டுள்ளது. இன்று (நவ.10) கிலோவுக்கு ₹2,000 அதிகரித்துள்ளது. 1 கிராம் ₹167-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,67,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மாதத்தில் தங்கத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு வெள்ளி விலை உயர்ந்ததால் பலரும், அதில் முதலீடு செய்தனர். ஆனால், அதன் பின்னர் விலை சரிந்த பிறகு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு இன்றைய விலை உயர்வு மகிழ்ச்சியை அளித்துள்ளது.


