News July 14, 2024

இனி 10 ஆண்டுகள் வரை சிறை

image

கள்ளச்சாராய வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் நேற்று முதல் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்தல், வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றிற்கு 3-7 ஆண்டுகளுக்கு சிறை, ₹2-3 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத மதுபானம் தொடர்பான குற்றங்களுக்கு, 5 -10 ஆண்டுகளுக்கு சிறை, ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

Similar News

News July 11, 2025

95 வருட சாதனையை உடைப்பாரா கில்?

image

இந்திய டெஸ்ட் கேப்டன் கில் ENG-க்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில், 4 இன்னிங்ஸில் 585 ரன்களை விளாசி இருக்கிறார். அவர் இன்னும் 6 இன்னிங்ஸில் 390 ரன்களை அடித்தால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் 95 வருட ரெக்கார்டை தகர்த்து விடுவார். 1930-ல் பிராட்மேன் ENG-க்கு எதிராக 974 ரன்களை அடித்திருந்ததே சாதனையாக இருக்கிறது. சாதிப்பாரா கில்?

News July 11, 2025

ஜூலை 14-ல் பூமி திரும்பும் ஆக்சியம் 4 குழு

image

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த ஜூன் 25-ம் தேதி ஃபுளோரிடாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர். அங்கு தங்களின் ஆராய்ச்சி பணிகளை முடித்துக்கொண்டு ஜூலை 10-க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் பூமிக்கு திரும்பலாம் என்ற தகவல் இருந்தது. இந்நிலையில், ஜூலை 14-ல் இந்த ஆக்சியம் 4 குழு பூமிக்கு திரும்பவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

News July 11, 2025

‘செல்லம்மா… செல்லம்மா…’

image

Checked ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட்டில் சிம்பிளாக பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி இருக்கிறது. கோல்டன் ஆரோ பாட்டுக்கு டான்ஸ் ஆடி இளைஞர்களின் நெஞ்சில் அம்புவிட்டவர், தற்போது பவன் கல்யாணின் ‘OG’ படத்தில் நடித்து வருகிறார். அவரது போட்டோஸ் பார்த்து, ‘கட்டம் போட்ட சட்டையில் கண்ணழகு நெருப்பாக, ஜீன்ஸ் நடையில் என் நெஞ்சு பனியாக கசிகுற லாவகமா’ என நெட்டிசன்கள் கவிதை பாட தொடங்கிவிட்டனர்.

error: Content is protected !!