News November 19, 2024
ரேஷன் கடை ஊழியர் பணிக்கு நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கடலூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 152 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்முக தேர்வு 25.11.2024 முதல் 05.12.2024 வரை நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு மைய தலைவர் தெரிவித்துள்ளார். SHARE IT
Similar News
News December 17, 2025
கடலூர்: ரயில் மோதி பறிபோன 5 உயிர்கள்..

திருச்சியில் இருந்து நேற்று (டிச.16) ஹவுரா நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. இந்த ரயில் விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி அருகே அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது, ரயில் தண்டவாளத்தில் நின்ற 5 பசு மாடுகள் மீது மோதியது. இதில் 5 பசுமாடுகளும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 17, 2025
சிறுவத்தூர்: பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூரை சேர்ந்தவர் கலியமூர்த்தி மனைவி பூங்கோதை (68). இவர் தனது வீட்டின் அருகில் நடந்து சென்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்தார். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூங்கோதை நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 17, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.16) இரவு 10 மணி முதல் இன்று (டிச.17) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


