News May 4, 2024

யுவனுக்கு ஊட்டிவிட்ட இளையராஜா

image

இளையராஜா, தன்னுடைய விடுமுறையை மொரீஷியஸ் நாட்டில் கழித்து வருகிறார். அங்கு அவர் தனியாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தைத் தனது X பக்கத்தில் பகிர்ந்தது, இணையத்தில் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் அங்கு சென்றுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுக்கு சாப்பாடு ஊட்டி விடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், யுவனும் மொரீஷியஸ் வந்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.

Similar News

News November 7, 2025

அழகே பொறாமைப்படும் பேரழகுக்கு ஹேப்பி பர்த்டே!

image

நிஜத்தில் ராணிகள் இப்படிதான் இருந்திருப்பார்களோ என என்னும் வகையில் ரசிகர்களை வியக்க வைத்த ‘ஸ்வீட்டி’ அனுஷ்காவுக்கு இன்று ஹேப்பி பர்த்டே. அருந்ததி ஜக்கம்மாவாக, வானம் சரோஜாவாக, பாகுபலி தேவசேனாவாக நடிப்பில் மட்டும் மிரட்டாமல், தனது அழகாலும் திரையில் ஓவியமாக நின்றார். அனுஷ்கா நடித்ததில் உங்களுக்கு பிடித்த படத்தை கமெண்ட் பண்ணுங்க?

News November 7, 2025

BREAKING: அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பி நீக்கம்

image

செங்கோட்டையன் ஆதரவாளரான திருப்பூர் Ex MP சத்யபாமா உள்ளிட்ட 12 முக்கிய நிர்வாகிகளை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இபிஎஸ் நீக்கியுள்ளார். Ex MP சத்யபாமா, கடந்த 30-ம் தேதி செங்கோட்டையனுடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சத்யபாமாவை ஏற்கெனவே மாவட்ட மகளிர் அணி பொறுப்பிலிருந்து EPS நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 7, 2025

இது என்னடா சீன அதிபருக்கு வந்த புது சோதனை!

image

தென் கொரியாவில் டிரம்பை சந்தித்தபோது சீன அதிபர் ஜி ஜின்பிங் சிரித்து பேசும் புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோ சீனாவில் வெளியாகாதாம். ஏனென்றால், போட்டோஸ் மற்றும் தகவல்களை பகிர்வதில் கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்திருப்பதால் அங்கு இது வெளியாகாது. ஆனால், சீன அதிபரின் இந்த மறுபக்கத்தை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என வெள்ளை மாளிகை இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!