News October 12, 2025

ஞாயிறு அன்று இதை செய்தால் தீராத கடனும் தீரும்

image

இரவு 8 – 11.30 மணிக்குள் எந்த நேரத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 4 மிளகை எடுத்துக்கொண்டு, நிலை வாசலுக்கு வெளியே வாருங்கள். குலதெய்வத்தை மனதார வேண்டி கையில் இருக்கும் மிளகை தலைக்கு இடது புறமாக 3 முறை மட்டும் சுற்றுங்கள். அதன் பிறகு, 4 மிளகையும் 4 திசைகளில் கண்ணுக்கு தெரியாமல் தூர எறிந்து விடுங்கள். அவ்வளவுதான். இதை 3 வாரம் தொடர்ந்து செய்தால், கஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம்!

Similar News

News December 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை
▶குறள் எண்: 541
▶குறள்:
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
▶பொருள்: குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

News December 6, 2025

இந்த வார ஓடிடி ட்ரீட்!

image

இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க அரை டஜன் படங்கள் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளன. *கோமதி சங்கரின் ‘STEPHEN’ : டிச.5, நெட்ஃபிளிக்ஸ் *பிரணவ் மோகன்லாலின் ‘டைஸ் ரே’: டிச.5, ஜியோ ஹாட்ஸ்டார் * ரஷ்மிகாவின் ‘The Girlfriend’: டிச.5, நெட்ஃபிளிக்ஸ் *அஸ்வின் குமாரின் ‘தூள்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்’: டிச.5, ஆஹா *விதார்த்தின் ‘குற்றம் புரிந்தவன்’: டிச.5, சோனி லைவ் *வைபவின் ‘The Hunter’ Chapter 1: டிச.5, ஆஹா

News December 6, 2025

12 மாவட்டங்களில் மழை பொழியும்: IMD

image

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், தென்காசி, நெல்லை, தேனி, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவுநேரத்தில் வாகனம் ஓட்டுவோர் மிகுந்த கவனத்துடன் பயணிக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

error: Content is protected !!