News August 21, 2024

அதுபோன்ற ஆட்டத்தை வாழ்நாளில் பார்த்ததில்லை!

image

இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியை பாக்., வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி பாராட்டியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில், “2022 டி20 WC தொடரில் பாக்., அணிக்கு எதிராக விராட் கோலி விளையாடிய இன்னிங்ஸை போல எனது முழு வாழ்க்கையிலும் ஒரு போட்டியை தான் பார்த்ததில்லை” எனக் கூறியுள்ளார். அந்தப் போட்டியில், 82 (53) ரன்கள் எடுத்து கோலி இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தார்.

Similar News

News January 24, 2026

உங்கள் மனைவியிடம் இந்த 7 அறிகுறிகள் உள்ளதா?

image

உங்க மனைவி, உங்க மீது கோபத்தில் இருப்பதை இந்த அறிகுறிகள் சொல்லிவிடும்: 1)வழக்கத்துக்கு மாறான அமைதி 2)அடிக்கடி உங்களை விமர்சிப்பது 3)அடிக்கடி எரிச்சல் / கோபம் 4)தலைவலி, தசைப்பிடிப்பு அறிகுறிகள் 5)வழக்கமாக செய்துகொண்டிருந்த விஷயங்களிலிருந்து விலகுவது 6)தாம்பத்ய உறவை தவிர்ப்பது 7)கடமைக்காக பேசுவது, இடித்துப் பேசுவது என பேச்சில் அதிருப்தி. அப்புறமென்ன, உடனே காரணத்தை கண்டறிந்து, சரிசெய்யுங்கள்!

News January 24, 2026

விஜய்க்கு திருமா எச்சரிக்கை

image

கூட்டணியை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தவெகவை NDA-வுக்குள் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் சிலர் கணிக்கின்றனர். இந்நிலையில், தங்கள் கூட்டணியில் இணைய விஜய்க்கு பாஜக அழுத்தம் தருவதாக குற்றம்சாட்டியுள்ள திருமாவளவன், நெருக்கடிக்கு பயந்து விஜய் NDA-வில் இணைந்தால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என எச்சரித்துள்ளார்.

News January 24, 2026

ஆஸி.,யை எதிர்கொள்ளும் இந்திய மகளிர் படை இதுதான்!

image

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் WPL முடிந்தவுடன், இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்நிலையில் மார்ச் 6-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கான அணியை BCCI அறிவித்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணியில், ஸ்மிருதி, ஷபாலி, ஜெமிமா, ரிச்சா, அமன்ஜோத் கவுர், உமா செத்ரி, பிரதிகா, ஹர்லீன், தீப்தி, ரேணுகா, சினே ராணா, கிராந்தி, வைஷ்ணவி, சயாலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

error: Content is protected !!