News March 30, 2025

என்னை மிக உயர்ந்தவளாக கருதவில்லை: ஜோதிகா

image

நடிப்பை புறந்தள்ளிவிட்டு குழந்தைகளை வளர்த்தது பற்றி நடிகை ஜோதிகா பதிலளித்துள்ளார். குழந்தைகளின் மழலைப் பருவத்தில் அவர்களுடன் இருக்க வேண்டியது ஒரு தாயின் கடமை. அதைதான் நானும் செய்தேன். அதை பெருந்தன்மை என சிலர் கூறுகிறார்கள். பெருந்தன்மையாக இருப்பது ஒன்றும் தியாகம் கிடையாது. அது நமது நற்பண்பு மட்டுமே. என்றைக்கும் நான் என்னை உயர்ந்தவளாக கருதியது கிடையாது என ஜோதிகா கூறியுள்ளார்.

Similar News

News March 8, 2026

இந்த App உங்க ஃபோன்ல இருக்கா? முடிஞ்சுது போங்க!

image

ஓடிடி-யில் படம் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டதால் இதற்காகவே நெட்பிளிக்ஸ், ப்ரைம் அக்கவுண்ட்டுகளுக்கு பணம் செலுத்தி வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் இதற்கு பணம் செலுத்த முடியாதவர்கள், அதில் வரும் படங்களை இலவசமாக பார்க்கவேண்டும் என்பதற்காக Playstore-ல் இல்லாத ‘Net Mirror’ போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்கின்றனர். இதுபோன்ற செயலிகள் உங்கள் ஃபோனை ஹாக் செய்வதோடு அதிலுள்ள தகவல்களை திருடலாம். உஷார்!

News March 8, 2026

கூட்டணி விவகாரத்தில் கோட்டை விட்ட தவெக!

image

பவர் ஷேரிங் ஆப்சனை கொடுத்தும் எந்த கட்சியும் நம்முடன் வராதது ஏன் என மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. விஜய்க்கு ஆதரவாக பேசிவந்த TTV தினகரன் முதல் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என பேசிய பிரேமலதா வரை எதிரெதிர் அணியில் ஐக்கியமாகினர். கடைசி வரை பேசி வந்த காங்கிரஸும் திமுகவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்துவிட்டது. இதனால், நாம் கோட்டை விட்டது எங்கே என விஜய் விளக்கம் கேட்டுள்ளாராம்.

News March 8, 2026

காமெடி நடிகர் கோரி பார்கர் காலமானார்.. குவியும் அஞ்சலி

image

‘Love Boat’, ‘Will & Grace’ உள்ளிட்ட பல தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த பிரபல நடிகர் கோரி பார்க்கர்(60) காலமானார். நடிப்பு மட்டுமின்றி மேடை நாடகத்திலும் நகைச்சுவை வேடங்களில் அசத்தி வந்த கோரி பார்க்கர், புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக திரைப்பிரபலங்கள் பலரும் கேன்சர் பாதிப்பால் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். So sad!

error: Content is protected !!