News July 13, 2024

ஆதார் டவுன்லோடு செய்வது எப்படி?

image

ஆதார் உடனடியாக தேவைப்படும்பட்சத்தில், நாமே எளிதில் மொபைல், கணினியில் டவுன்லோடு செய்யலாம். இதற்கு <>https://myaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar/en<<>> என்ற இணையதளத்துக்கு சென்று, ஆதார் எண்ணை முதலில் பதிவிட வேண்டும். பிறகு, கேப்ட்சாவை குறிப்பிட்டால், ஆதாரில் உள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த ஓடிபியை உள்ளிட்டதும் டவுன்லோடு ஆகும் ஆதாரை உடனடித் தேவைக்கு பயன்படுத்தலாம்.

Similar News

News July 11, 2025

கடலூர் கோர விபத்து எதிரொலி: 2 கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட்

image

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கேட் கீப்பரின் தூங்கிக் கொண்டிருந்ததால் தான் இந்த விபத்து நடந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் அரக்கோணம்- செங்கல்பட்டு ரெயில் மார்க்கத்தில் நள்ளிரவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 கேட் கீப்பர்கள் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டறிந்து, அவர்களை சஸ்பெண்ட் செய்தனர்.

News July 11, 2025

எதனால் லார்ட்ஸ் மைதானத்தில் மணி அடிக்கப்படுகிறது?

image

லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி துவங்குவதற்கு முன் மணி அடிப்பது என்பது மரபாகும். போட்டி தொடங்குகிறது என அறிவிப்பதற்கே இந்நிகழ்வு. கடந்த 2007-ம் ஆண்டு முதல் இந்த மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க முன்னாள் வீரர்கள் அழைக்கப்படுவார்கள். இந்தமுறை சச்சினை அழைத்துள்ளார்கள். மன்சூர் பட்டோடி, கவாஸ்கர், வெங்க்சார்கர், கபில் தேவ், கங்குலி ஆகியோர் இதற்கு முன்பு இந்த கெளரவ நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள்.

News July 11, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶ இயல்: அரசியல் ▶அதிகாரம்: கல்வி ▶குறள் எண்: 392 ▶குறள்: எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. ▶ பொருள்: எண் என்று சொல்லப்படுவதும், எழுத்து என்று சொல்லப்படுவதும் ஆகிய இரண்டினையும் அறிந்தோர், சிறப்புடைய மக்களுயிர்கட்குக் கண் என்று சொல்லுவார்கள்.

error: Content is protected !!