News May 2, 2024
ரசாயனம் கலந்த மாம்பழத்தை கண்டறிவது எப்படி?

மாம்பழம் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்டுள்ளதா? என்பதை மக்கள் எளிதாக கண்டறியலாம். ஒரு பக்கெட் நிறைய நீர் எடுத்து அதில் மாம்பழத்தை போட்டால் இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் மூழ்கி கிடக்கும். ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்கள் மிதக்கும். இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்கள் வெளிர் நிறத்தில் இருந்தாலும் அதிக வாசனை கொண்டதாக இருக்கும். ஆனால், ரசாயனம் மூலம் பழுக்க வைத்தவற்றில் வாசனையே இருக்காது.
Similar News
News December 14, 2025
ஜூஸ், பிஸ்கட், தண்ணீர், நொறுக்குத் தீனிகள் ரெடி!

தி.மலையில் மாலை நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மண்டல மாநாட்டில் 1.30 லட்சம் பேருக்கு பிஸ்கட், ஜூஸ், கடலை பர்பி, மிக்சர் உள்ளிட்ட 9 பொருள்கள் அடங்கிய சிற்றுண்டி பை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக வடக்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்றைய மாநாட்டில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களிலிருந்து 91 தொகுதிகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
News December 14, 2025
BREAKING: அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அறிவிப்பு

நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் கட்டாயம் e-KYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இல்லையெனில், ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்றும், அரசு திட்ட சலுகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. MERA KYC, FACE RD ஆகிய ஆப்கள் மூலம் செல்போனிலேயே ரேஷன் கார்டு e-KYC-ஐ அப்டேட் செய்யலாம். இதுவரை அப்டேட் செய்யாதவர்கள் உடனே முந்துங்கள்!
News December 14, 2025
தாய்லாந்து கடற்கரை பகுதிகளில் ஊரடங்கு!

கம்போடியாவின் <<18550033>>கோ கோங்<<>> மாகாணத்தின் மீது தாய்லாந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இருநாடுகள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தாய்லாந்தின் தென்கிழக்கு மாகாணமான டிராட்டில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுற்றுலா தீவுகள் தவிர்த்து, 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக கிழக்கு சாகியோ மாகாணத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.


