News June 19, 2024
அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகை

அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகை என்ற பெருமையை தீபிகா படுகோன் பெற்றிருக்கிறார். அவர் ஒரு படத்திற்கு ₹30 கோடி வரை சம்பளமாகப் பெறுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அவருடைய சொத்து மதிப்பு ₹500 கோடிக்கும் மேல் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரைத் தொடர்ந்து கங்கனா ₹27 கோடி, கத்ரீனா கைஃப் ₹25 கோடி, பிரியங்கா சோப்ரா ₹24 கோடி, ஆலியா பாட் ₹20 கோடி சம்பளம் பெறுகின்றனர்.
Similar News
News January 24, 2026
பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் இதுவா?

வசூல் ரீதியாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்குநர் பிராங்கிளின் ஜேகப் கதையில் நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனியின் Writer படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் ஜேகப். வழக்கமாக ஜாலியான ஸ்கிரிப்டுகளில் நடிக்கும் பிரதீப், சீரியஸான கதைகளை உருவாக்கும் இயக்குநரோடு கமிட்டாகி இருப்பதாக கூறப்படும் தகவல் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
News January 24, 2026
பாதாளச் சாக்கடையில் கொசுவலை: மேயர் விளக்கம்

சென்னையின் சில இடங்களில் பாதாளச் சாக்கடை மூடியின் அடிப்பகுதியில் <<18935030>>கொசுவலை<<>> போர்த்தியது விமர்சனத்திற்கு உள்ளானது. இது கொசுக்களுக்காக வைக்கப்பட்டது அல்ல என மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார். ஒரு கவுன்சிலரின் வேண்டுகோளின்படி வைக்கப்பட்டது என்றும், மாநகராட்சியின் முன்னெடுப்பு அல்ல எனவும் அவர் கூறினார். இதை இவ்வளவு சர்ச்சையாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிரியா தெரிவித்தார்.
News January 24, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்வு!

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹2,800 உயர்ந்த நிலையில், இன்று(ஜன.24) மேலும் ₹560 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹14,620-க்கும், சவரன் ₹1,16,960-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது.


