News May 7, 2025
ஹீரோ உதட்டை கடித்து விட்டார்: மாதுரி தீட்சித்

தனது உதட்டை ஹீரோ கடித்து விட்டதாக பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் கூறியுள்ளார். நாயகன் படம், இந்தியில் தயாவான் என்று 1988ல் ரீமேக் செய்யப்பட்டது. அதில் வினோத் கன்னா, மாதுரி நடித்தனர். படத்தில் நடித்தபோது வினோத் கன்னா அத்துமீறியதாகவும், உதட்டை கடித்ததாகவும், இதில் ரத்தம் வந்து விட்டதாகவும், இக்காட்சியை நீக்காமல் இருக்க ரூ.1 கோடி தனக்கு தரப்பட்டதாகவும் மாதுரி தீட்சித் கூறியுள்ளார்.
Similar News
News November 14, 2025
ECI மீதான குற்றச்சாட்டை மக்கள் ஏற்கவில்லை: EPS

பிஹார் தேர்தல் வெற்றிக்கு, PM மோடி, அமித்ஷா மற்றும் நிதிஷ்குமாருக்கும் EPS வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கூட்டணியின் போலி பிரசாரங்களை பிஹார் மக்கள் நிராகரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ECI மீதான இண்டியா கூட்டணியின் குற்றச்சாட்டை மக்கள் ஏற்கவில்லை என தெரிவித்த அவர், NDA-வின் கூட்டுத்தலைமைக்கு கிடைத்த வெற்றி இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News November 14, 2025
200 இடங்களில் NDA முன்னிலை

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் NDA கூட்டணி 200 இடங்களில் முன்னிலையில் உள்ளது. MGB கூட்டணி 37 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. மற்றவை 6 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. BJP – 91, JD(U) – 81, RJD – 26, INC – 4, AIMIM – 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
News November 14, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. அறிவித்தார் ஆட்சியர்

புதுச்சேரியில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால், நாளை பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளைய விடுமுறை ஈடுசெய்ய ஜன.3-ம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


