News September 3, 2025

மூலிகை: நன்மைகளை வாரி வழங்கும் மணத்தக்காளி கீரை!

image

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி,
➤மணத்தக்காளி பழங்களை உலர வைத்து வற்றலாக சாப்பிட்டால், காய்ச்சலின் போது ஏற்படும் வாந்தி உணர்வு கட்டுப்படுத்தப்படும்.
➤மணத்தக்காளி இலைச் சாற்றை எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், வாய்ப்புண் மறையும்.
➤மணத்தக்காளி இலைகளோடு பருப்பு சேர்த்து கடைந்து சமைக்கலாம். வயிற்றுப் புண், ரத்தக்குறைவு, உடல்சோர்வு போன்றவை நீங்கும். SHARE IT.

Similar News

News November 8, 2025

BREAKING: விலை 2 மடங்கு உயர்ந்தது

image

தமிழகம் – கேரளா இடையே <<18231577>>ஆம்னி பஸ்கள்<<>> இயக்கப்படாததால் விமானக் கட்டணம் இருமடங்கு அதிகரித்துள்ளது. சென்னை – கொச்சின் இடையே வழக்கமாக ₹3,500 ஆக இருந்த கட்டணம் ₹8,000 வரையிலும், சென்னை – திருவனந்தபுரம் இடையே ₹4,500 ஆக இருந்த கட்டணம் ₹9,000 வரையும் உயர்ந்துள்ளது. மதுரை – திருவனந்தபுரம் இடையே, ₹5,000 வரை இருந்த கட்டணம் ₹16,500 வரை உயர்ந்துள்ளது. சபரிமலை சீசன் என்பதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

News November 8, 2025

தினமும் 1 முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும்?

image

முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆண்டி-ஆக்ஸிடண்டுகள், புரத சத்து உள்ளன. இதனால், 1 மாதத்திற்கு தினமும் ஒரு முட்டை என தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். ➤மூளை மற்றும் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ➤முடி வளர்ச்சிக்கு உதவும் ➤சருமம் பளபளப்பாகலாம் ➤எடையை சீராக பராமரிக்க உதவும் ➤இதயம் ஆரோக்கியமாகும் என டாக்டர்கள் சொல்கின்றனர். அனைவரும் ஆரோக்கியமாக இருக்க SHARE THIS.

News November 8, 2025

சஞ்சு சாம்சனை இழுக்க CSK மீண்டும் முயற்சி

image

ராஜஸ்தானிடம் இருந்து சஞ்சு சாம்சனை டிரேட் செய்ய CSK மீண்டும் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சனுக்கு மாற்றாக முக்கியமான (ஜடேஜா அல்லது துபே) வீரரை CSK-விடம் ராஜஸ்தான் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த வீரரிடம் CSK பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில், இரு அணிகளுக்கும் இடையில் டிரேடிங் நடக்கும் என்று ஐபிஎல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

error: Content is protected !!