News October 17, 2025
ஒரே இளைஞரை திருமணம் செய்த 2 பெண்கள்❤️❤️

கர்நாடகாவில் ஒரே மேடையில் 2 பெண்களை இளைஞர் கரம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது. இளைஞர் வசிம் ஷேக்குடன்(25) சிறுவயதில் இருந்தே ஷிஃபா, ஜனத் இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். வசிமை பிரிய மனமில்லாமல் இருந்த இருவரும், அவரையே திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி, குடும்பத்தினர் சம்மதத்துடன் ஒரே மேடையில் இருவரையும் வசிம் கரம்பிடித்தார்.
Similar News
News November 17, 2025
செஞ்சியில் மாபெரும் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வருகின்ற நாள். 23/11/2025. ஞாயிற்றுக்கிழமை
மாபெரும் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் இடம்: செஞ்சி திருவண்ணாமலை சாலை, செல்வி தியேட்டர் பக்கத்தில் சிட்டி யூனியன் பேங்க் அருகில் இலவச மருத்துவ முகாம் நடைபெறும். முகாமில் செஞ்சி சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு இன்று (16) செஞ்சி அரிமா சங்கம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
News November 17, 2025
நாகை மாவட்டத்தில் 37 செ.மீ மழை பதிவு!

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கோடியக்கரையில் 11.7 செ.மீ, வேதாரண்யம் – 7.1 செ.மீ, தலைஞாயிறு – 6.1 செ.மீ, திருப்பூண்டி – 3.9 செ.மீ, வேளாங்கண்ணி – 3.4 செ.மீ, நாகை – 3.1 செ.மீ, திருக்குவளை – 1.8 செ.மீ
என நாகை மாவட்டத்தில் மொத்தமாக 37 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் (நவ.17) நாகை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
2 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.. Alert

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு மேல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. அதேபோல், குமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


