News August 22, 2024

இவர்தான் தற்போது சிறந்த பவுலர்: சவுத்தி

image

இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ராதான் தற்போது கிரிக்கெட்டில் சிறந்த பவுலர் என நியூசிலாந்து கேப்டன் சவுதி பாராட்டியுள்ளார். ‘சியட்’ விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ரா, முன்பை விட சிறப்பாக ஆடுவதாக கூறினார். மேலும், அவரைவிட சிறந்த வீரர் யாரும் இல்லை என தான் நினைப்பதாகவும், மூன்று வடிவ போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடி வருவதாகவும் புகழ்ந்துள்ளார்.

Similar News

News November 14, 2025

162 இடங்களில் NDA கூட்டணி முன்னிலை

image

பிஹார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, NDA – 162 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. MGB – 76, ஜன் சுராஜ் – 3, மற்றவை – 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன. 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

News November 14, 2025

CM நிதிஷ்குமாரின் வருங்காலம் கேள்விக்குறி?

image

பிஹார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜே.டி.யு கட்சியை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. காலை 9.30 மணி நிலவரப்படி, பாஜக 71 தொகுதியிலும், ஜே.டி.யு 58 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. ஏற்கனவே NDA கூட்டணியின் CM வேட்பாளர் யார் என முடிவு செய்யப்படாத நிலையில், ஜே.டி.யு நிதிஷ்குமார் இம்முறை CM வேட்பாளர் ஆவது சந்தேகம்தான் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

News November 14, 2025

BREAKING: தங்கம் விலை சரசரவென குறைந்தது

image

நேற்று உச்சத்தை தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹60 குறைந்து ₹11,840-க்கும், சவரனுக்கு ₹480 குறைந்து ₹94,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் ₹2400 உயர்ந்த நிலையில், இன்று வெறும் ₹480 மட்டுமே குறைந்துள்ளது.

error: Content is protected !!