News September 30, 2025

ஆஸி.க்கு எதிரான போட்டிகளில் இருந்து ஹார்திக் விலகல்!

image

ஹார்திக் பாண்ட்யா வரவிருக்கும் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திலிருந்து விலகியுள்ளார். இந்திய அணி 3 ODI மற்றும் 5 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. காயம் காரணமாக விலகியுள்ள ஹர்திக், குணமடைந்தால் T20 போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது. ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியின்போது, இடது தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஹர்திக், இறுதி போட்டியை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 13, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 548 ▶குறள்: எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.
▶பொருள்: ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.

News December 13, 2025

‘படையப்பா’ படத்தின் Bare-Body சீன் பற்றிய சுவாரஸ்யம்

image

‘படையப்பா’ படத்தில் வரும் Bare-Body சீன் குறித்து சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். வெற்று உடம்போடு நடிக்க போவதாக ரஜினி சார் சொன்னார். அது கேவலமாக இருக்கும் என்று சொன்னேன். அதை கேட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் சென்றவர், அந்த சீனில் நடித்தார். அதை பார்த்து பிரமிப்பு அடைந்தபோது, சின்ன வயசுல மூட்டை தூக்கி வளந்த உடம்பு இது என ரஜினி கூறியதாக கனல் கண்ணன் நினைவுகூர்ந்துள்ளார்.

News December 13, 2025

அண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்

image

மகாராஷ்டிராவில் லோக் ஆயுக்தா சட்டத்தை உடனே அமல்படுத்த கோரி, சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். தனது சொந்த கிராமமான ரலேகான் சித்தியில் 2026 ஜனவரி 30-ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளார். நாட்டில் நடக்கும் ஊழலை கண்டித்து கடந்த 2011-ல் டெல்லியில் இவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டதால், மத்தியில் காங்., ஆட்சி அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!