News October 8, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.08) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News November 10, 2025

BREAKING: அதிமுகவில் இணைந்தார்

image

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மாற்றுக்கட்சியில் இணைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மதிமுக மாநில மாணவர் அணி துணை செயலாளர் சிவநாதன், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு, மல்லை சத்யா மதிமுகவில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது சிவநாதனும் வெளியேறியுள்ளார்.

News November 10, 2025

கமல்ஹாசனின் அடுத்த பட டைரக்டர் இவரா?

image

ரஜினியுடன் இணையும் படத்திற்கு முன்பாக, ஒரு படத்தில் நடித்து முடிக்க கமல்ஹாசன் முடிவு எடுத்துள்ளாராம். அதன்படி, ‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ படங்களை இயக்கிய அருண்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இதுதொடர்பாக, சமீபத்தில் இருவரும் நேரில் சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, சண்டை கலைஞர்களான அன்பறிவு இயக்கத்தில் கமல் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

News November 10, 2025

பாமக அலுவலகத்தில் குவிந்த போலீஸ்.. பதற்றம்

image

சென்னை, தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்திற்கு மர்மநபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில், அது புரளி என தெரியவந்தது. அதேபோல், மலேசியாவில் இருந்து சென்னை வந்திருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அதுவும் புரளி என தெரியவந்தது.

error: Content is protected !!