News October 12, 2025

விஜய்க்கு H.ராஜாவின் ஆறுதல் ஆபத்தானது: அமீர்

image

கொள்கையற்ற தலைவர்கள் எப்போதும் ரசிகர் கூட்டத்தை உருவாக்க முடியுமே தவிர, நல்ல மக்களை உருவாக்க முடியாது என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியலை வரவேற்கிறேன். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், வந்த உடனே அவரிடம் நாட்டை கொடுக்க முடியுமா என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறி எனத் தெரிவித்தார். மேலும், கரூர் விவகாரத்தில் விஜய்க்கு H.ராஜாவின் ஆறுதல் ஆபத்தானது எனவும் கூறினார்.

Similar News

News December 13, 2025

பாகிஸ்தானில் மகாபாரத, சமஸ்கிருத படிப்புகள்

image

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக சமஸ்கிருத இலக்கிய படிப்பு, லாகூர் பல்கலைகழகத்தில் (LUMS) கற்பிக்கப்பட தொடங்கியுள்ளன. இதோடு சேர்த்து பகவத் கீதை, மகாபாரதத்தின் சில முக்கிய பகுதிகளும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர் ஷாகித் ரஷீத், அடுத்த 10-15 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து பகவத் கீதை, மகாபாராத அறிஞர்கள் வெளிவருவார்கள் என தெரிவித்துள்ளார்.

News December 13, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 13, கார்த்திகை 24 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

News December 13, 2025

2 போட்டிகளை வைத்து கில்லை எடை போட முடியாது: நெஹ்ரா

image

SA-க்கு எதிரான டி20 தொடரில் கில் சொதப்பி வருகிறார். இது குறித்து GT கோச் நெஹ்ராவிடம் கேட்டபோது, டி20 போன்ற மிக குறுகிய ஃபார்மெட்டில், 2 போட்டிகளில் விளையாடுவதை வைத்து ஒரு வீரரை எடை போட கூடாது என தெரிவித்துள்ளார். கில் சரியாக ஆடவில்லை என சாம்சன், அவரும் ஆடவில்லை என ருதுராஜ் என வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்க முடியாது என்றும் நெஹ்ரா கூறியுள்ளார்.

error: Content is protected !!