News August 21, 2024
Grinder Gay ஆப்பிற்கு தடை விதிக்க ஐகோர்ட் உத்தரவு

2009 இல் தொடங்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான முதல் ஆப் ‘Grinder Gay App’ ஆகும். தற்போது இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான மொபைல் பயன்பாடாக மாறியுள்ளது. இந்தியாவில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் Grinder Gay App-ஐ தடை செய்ய, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (20.8) உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 16, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (15.01.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News January 15, 2026
BREAKING: அவனியாபுரம் ஜல்லிகட்டு; 44 பேர் சிகிச்சை

அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் 6வது சுற்று முடிவடைந்து 7வது சுற்று தொடங்கியுள்ளது. 6வது சுற்று முடிவில் 15 மாட்டின் உரிமையாளர்கள், 23 மாடுபிடிவீரர்கள், காயமடைந்துள்ளனர். 6வது சுற்று முடிவில் 44 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 5 நபர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
News January 15, 2026
மதுரை : செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


