News August 4, 2024
சீனாவில் ‘திருமணம்’ குறித்த பட்டப்படிப்பு!

சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், திருமணம் குறித்த பட்டப்படிப்பை சீன அரசு கொண்டு வந்துள்ளது. ‘திருமண சேவைகள் மற்றும் மேலாண்மை’ என பெயரிட்டுள்ள இந்த படிப்பு, அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 12 மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும், இதை படிப்பவர்களுக்கு திருமணம் சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
BREAKING: தமிழக அரசு உயர்த்தி அறிவிப்பு

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் (PHC) பணியாற்றிவரும் பேறுகால தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ₹1,500 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதனை ₹7,367 ஆக உயர்த்தி, அதற்கான ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். ஏற்கெனவே 978 பேருக்கு PHC-ல் மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 1,575 பேருக்கும் பணியிடங்கள் காலியாகும் போது பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
News January 20, 2026
ஜனநாயகனுக்கு இன்று தீர்வு கிடைக்குமா?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் சென்சார் தொடர்பான வழக்கு இன்று சென்னை HC-ல் விசாரிக்கப்படவுள்ளது. படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டதற்கு எதிராக, திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வில் காலை 11.30 மணியளவில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், இன்றாவது தீர்வு கிடைக்குமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
News January 20, 2026
₹18,000 சம்பளம்.. 22,000 வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 குரூப் டி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. சம்பளம்: ₹18,000 முதல். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2026, ஜன.21 முதல் பிப்.20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். SHARE IT.


