News August 4, 2024
ஆளுநர்கள் செயலற்றவர்களாக இருக்கிறார்கள்: நீதிபதி

ஆளுநர்கள் செயலற்றவர்களாக இருக்கின்றனர் என, உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா தெரிவித்துள்ளார். பெங்களுருவில் தேசிய சட்டப்பல்கலைக்கழக கருத்தரங்கில் பேசிய அவர், அரசியலமைப்பின் படி ஆளுநர்கள் செயல்பட வேண்டுமே தவிர, ஒருசார்பாக செயல்படக்கூடாது என்றார். ஆளுநர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவாவது கவலை அளிப்பதாக தெரிவித்த அவர், இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 14, 2026
வள்ளலார் பொன்மொழிகள்

*சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன. *புண்ணியமும், பாவமும் மனம், சொல், செயல் ஆகிய வழிகளில் நம்மை வந்தடைகின்றன. *எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்திருக்கிறார் என்று அறிதலே கடவுள் பக்தியாகும். *உண்மையைச் சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். *மனதை அடக்க நினைத்தால் அடங்காது. அதை அறிய நினைத்தால் அடங்கும்.
News January 14, 2026
உதவ ஓடிவந்த டிரம்ப்பை கண்டித்த ரஷ்யா

ஈரானில் போராடுபவர்களுக்கு உதவிகள் தயாராக இருப்பதாக <<18850743>>டிரம்ப்<<>> தெரிவித்ததை ரஷ்யா கண்டித்துள்ளது. ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அமெரிக்கா நாசவேலைகளை செய்ய முயற்சிப்பதாகவும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், வெளிப்புற சக்திகளால் தூண்டப்பட்டு நடக்கும் போராட்டத்தை, அமெரிக்கா தனக்கு சாதமாக பயன்படுத்த முயற்சிப்பதாகவும் சாடியுள்ளது.
News January 14, 2026
PM மோடி தமிழர்களுக்கு தரும் மரியாதை: எல்.முருகன்

டெல்லியில் இன்று நடைபெறும் பொங்கல் விழாவில் PM மோடி நேரில் வந்து பங்கேற்பது, அவர் தமிழர்களுக்கு அளிக்கும் மரியாதை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், தமிழ் மொழியின் மீது PM மோடி அதிகமான பிரியத்தை வைத்துள்ளதாகவும், அதனால் தான் காசி தமிழ் சங்கமம் நான்காவது ஆண்டாக நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


