News March 22, 2024
பொன்முடிக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர்

உச்சநீதிமன்ற கண்டனத்தையடுத்து பொன்முடியை அமைச்சராக பதவியேற்க அழைப்பு விடுத்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மதியம் 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் நடைபெறவுள்ளது. இன்றைக்குள் பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில் பணிந்தார் ஆளுநர் ரவி.
Similar News
News November 7, 2025
டிஜிபி நியமன விவகாரம்: TN அரசுக்கு SC நோட்டீஸ்

தமிழகத்தில் டிஜிபியை நியமனம் செய்யாமல், பொறுப்பு டிஜிபியை நியமித்ததை எதிர்த்து, வழக்கறிஞர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார். இதில் உடனடியாக டிஜிபியை நியமிக்க வேண்டும் என SC உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதனை தமிழக அரசு நிறைவேற்றாததால், கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒன்றை கிஷோர் கிருஷ்ணசாமி என்பவர் தொடர்ந்தார். இதை விசாரித்த SC 3 வாரங்களில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
News November 7, 2025
டெல்லியில் ஒரு குத்து.. பிஹாரில் ஒரு குத்து: ராகுல்

பாஜக தலைவர்கள் சிலர் டெல்லி, பிஹார் என 2 மாநிலங்களில் வாக்களித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ம.பி., சத்தீஸ்கர், ஹரியானாவில் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர்கள், தற்போது பிஹாரிலும் தொடர்வதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, பாஜக MP ராகேஷ் சின்ஹா, டெல்லி பாஜக நிர்வாகி சந்தோஷ் ஓஜா கடந்த பிப்.,-ல் டெல்லியில் வாக்களித்துவிட்டு, தற்போது பிஹாரில் வாக்களித்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது.
News November 7, 2025
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த வாரத்திற்கான மழை விடுமுறையை ஈடுசெய்ய நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் நாளை பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.


