News April 2, 2025
அரசின் சிறப்பு பயிற்சி.. 266 பேர் வங்கி பணிக்கு தேர்ச்சி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘வங்கிப் பணிகளுக்கான உறைவிடப் பயிற்சி திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பயிற்சி பெற்ற 360 மாணவர்களில், 266 பேர் SBI வங்கியில் கிளார்க் பணிக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வரும் 10, 12ஆம் தேதி முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறவும் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News January 24, 2026
உங்கள் பெண் குழந்தைகளை இப்படி வளருங்க!

பெண் குழந்தைகளை கொண்டாடினால் மட்டும் போதுமா? அவர்களை மதிக்கவும் வேண்டும் என்பதற்காகவே இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு மகள் பிறந்தால் ஒரு குடும்பம் மட்டுமல்ல, சமூகமே வளருகிறது. அவர்களுக்கு அனைத்திலும், சம பங்கு, சம உரிமை, கல்வி, பாதுகாப்பு, மரியாதையை கொடுத்து பழகுங்கள். அவளின் அந்த சிரிப்பும், குழந்தைத்தனமும் என்றும் மறையாமல் ஒரு நல்ல சமூகமாக பார்த்துக்கொள்வோம். Happy National Girl Child Day!
News January 24, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 24, 2026
தமிழகத்தில் 2,016 சாலை விபத்துகள்.. மிக கவனம்

தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் நாள்தோறும் சாலை விபத்துகளில் 48 பேர் உயிரிழப்பதாக தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையர் தெரிவித்துள்ளார். இதன்படி, ஆண்டுக்கு சுமார் 17,000 பேர் உயிரிழக்கின்றனர். கடந்த ஜூன் மாத விபத்துகள் தொடர்பான மத்திய அரசு அறிக்கையின்படி, அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 2,016 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.


