News March 5, 2025
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.. சவரனுக்கு ₹440 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 5) சவரனுக்கு ₹440 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,065க்கும், சவரன் ₹64,520க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹560 அதிகரித்திருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக உயர்வைக் கண்டுள்ளது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமுமின்றி ஒரு கிராம் ₹107க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,07,000க்கும் விற்பனையாகிறது.
Similar News
News April 14, 2026
அருணாச்சல் பிரதேசம் எங்களுடையது: சீனா

<<19635016>>அருணாச்சல பிரதேசத்தின் கிராமங்களுக்கு<<>> சீனா பெயர் வைத்த விவகாரத்தில் இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. இந்நிலையில், அருணாச்சல் சீனாவின் பிராந்தியம் என்றும், அதை இந்தியா சட்டவிரோதமாக சேர்த்துக்கொண்டதாகவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அருணாச்சலை ஷாங்னான் (தெற்கு திபெத்) என்று குறிப்பிடும் சீனா, அதை தனது சொந்தப் பகுதி என்று தொடர்ந்து கூறிவருகிறது.

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. புது தகவல்

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதியை திமுக, அதிமுக 2 கட்சிகளும் வெளியிடவில்லை. இந்நிலையில், ஏப்.16-ல் தவெக தேர்தல் அறிக்கையை புத்தகமாக வெளியிடவுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். ஏற்கெனவே பிரசாரங்களில் புதிய வாக்குறுதிகளை அறிவித்துவரும் அவர், முழு தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை இடம்பெறச் செய்து, அதை அரசியல் வியூகமாக பயன்படுத்தலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.