News February 27, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹320 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.27) சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹8,010க்கும், சவரன் ₹64,080க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹106க்கும், 1 கிலோ ₹1,06,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் நேற்று சவரனுக்கு ₹200 குறைந்திருந்த நிலையில், 2வது நாளாக சரிவடைந்திருப்பது நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News February 27, 2025
வலுக்கும் எதிர்ப்பு: பயணத்தை ரத்து செய்த மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழகப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, அவர் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என்றதால் தமிழகத்தில் அவருக்கு கண்டனம் எழுந்துள்ளது. மும்மொழிக் கொள்கைக்கு எதிராக நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுப்பதும், அவரது பயணம் ரத்தாக காரணம் என கூறப்படுகிறது.
News February 27, 2025
நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து தருமபுரி மண்டல நிர்வாகியும், வழக்கறிஞருமான அண்ணாதுரை விலகுவதாக அறிவித்துள்ளார். நாட்டில் ஜனநாயகமில்லாத ஒரே கட்சி நாம் தமிழர் எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். பொதுக்குழு, செயற்குழு கூட்டி எந்த முடிவையும் சீமான் எடுப்பதில்லை என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். NTKவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகுவது சீமானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
News February 27, 2025
அட பாவத்த.. மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைச்சு..

சண்டை போடும் மனைவியை சமாதானப்படுத்த ₹27 லட்சத்தில் Porsche காரை ரஷ்ய கணவர் ஒருவர் வாங்கியுள்ளார். காதலர் தினத்தில் சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என நினைத்த போது, கார் சிறிய விபத்துக்குள்ளானது. ஆர்வமிகுதியில் அப்படியே மனைவிக்கு காரை கொடுத்துள்ளார். டேமேஜான கார் வேண்டாம் என மனைவி கூறவே, காரை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார். அவர் எப்படி குப்பைத் தொட்டி மேல் நிறுத்தினார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.