News March 31, 2025
ஒரே மாதத்தில் சவரனுக்கு ₹3,880 உயர்ந்த தங்கம்

சென்னையில் தங்கம் விலை இம்மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹3,880 அதிகரித்துள்ளது. கடந்த 1ஆம் தேதி 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹7,940க்கும், சவரன் ₹63,520க்கும் விற்பனையானது. பின்னர், ஜெட் வேகத்தில் அதிகரித்து 31 நாள்களில் சவரனுக்கு ₹3,880 உயர்ந்துள்ளது. <<15945454>>இன்று<<>> ₹520 உயர்ந்து புதிய உச்சமாக 1 சவரன் ₹67,400க்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் 1 சவரன் ₹50,200க்கு விற்பனையானது கவனிக்கத்தக்கது.
Similar News
News July 8, 2025
யஷ் தயாள் மீது பரபரப்பு FIR!

RCB வீரர் யஷ் தயாள் மீது உ.பி.யில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. காஜியாபாத்தை சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது இந்த FIR பதியப்பட்டுள்ளது. யஷ் தயாள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முதல்வர் குறை தீர்க்கும் போர்டல் மூலம் இளம் பெண் ஒருவர் அவர் மீது, பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் வைத்துள்ளார்.
News July 8, 2025
சுவாமிக்கு சாற்றும் மாலையை பக்தர்கள் அணியலாமா?

கடவுளின் சன்னதிக்குச் சென்ற அனைத்து பொருள்களுமே புனிதம் பெற்றுவிடும். அந்தவகையில், சன்னதியில் குடிகொண்டிருக்கும் தெய்வங்களுக்கு சாற்றப்படும் மாலைகளும் புனிதம் பெறும். அதனை பக்தர்களுக்கு அளிக்கும்போது அவர்களின் கடவுள் நம்பிக்கை மேலும் வலுப்பெறும். தனிநபர் (அ) வாகனங்கள் ஆகியவற்றுக்கு மாலை அணியும்போது, நமக்கான உத்வேகம் அதிகரிக்கும். தொடங்கும் காரியங்களும் நல்ல பலன்களை அளிக்கும்.
News July 8, 2025
பாமகவில் தொடரும் மோதல்.. அதிமுகவுக்கு தாவிய Ex மா.செ.,

பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே நடந்து வரும் மோதலால் அதிருப்தியில் பலர் சமீப காலமாக திமுக, அதிமுகவுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கடலூர் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் காசி நெடுஞ்செழியன் தலைமையில் 400 பேர் அதிமுகவில் இணைந்தனர். நெய்வேலியில் நடைபெற்ற இந்த இணைப்பு விழா பாமகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நெய்வேலி பாமகவின் வாக்கு வங்கி அதிகம் உள்ள தொகுதியாகும்.