News October 20, 2025

2 நாள்களில் தங்கம் விலை ₹2,240 குறைந்தது

image

அக். மாதம் பிறந்தது முதலே உயர்ந்து வந்த தங்கம் தற்போது சரிந்து வருகிறது. தீபாவளி பரிசாக <<18055434>>இன்று<<>> சவரனுக்கு ₹640 குறைந்தது. கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ₹2,240 குறைந்துள்ளது. <<18055337>>இந்தியப் பங்குச்சந்தைகள்<<>> உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்களின் கவனம் அங்கு திரும்பியதே தங்கம் விலை சரிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. எது எப்படியோ தங்கம் விலை குறைந்தால் சரி என நடுத்தர மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

Similar News

News December 5, 2025

பாலைய்யா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி

image

இன்று வெளியாகவிருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2 தாண்டவம்’ தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை ரிலீஸ் செய்யமுடியவில்லை என்றும், இது தங்களுக்கு மிகவும் கடினமான தருணம் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் பாலைய்யா ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். முன்னதாக தொழில்நுட்ப பிரச்னையால் ‘அகண்டா 2’ பிரீமியர் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 5, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 5, கார்த்திகை 19 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12.15 AM – 1:15 AM & 6.30 PM – 7.30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 AM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: பிரதமை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்

News December 5, 2025

இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்த கேலக்ஸி!

image

பரந்து விரிந்த வான்வெளியில் உள்ள ரகசியங்கள் ஏராளம். அந்தவகையில், இந்திய விஞ்ஞானிகள் Milkyway கேலக்ஸியை போலவே ஒரு புதிய சுழல் விண்மீன் கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். பிரபஞ்சம் உருவான பெருவெடிப்பு நிகழ்ந்து, 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் இது உருவாகியுள்ளது. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட இதற்கு, இந்திய நதியான Alaknanda-வின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!