News February 27, 2025
2 நாளில் சவரனுக்கு ₹520 குறைந்த தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2ஆவது நாளாக சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து ஏற்றத்திலிருந்த தங்கத்தின் விலை புதிய உச்சமாக கடந்த 25ஆம் தேதி ₹64,600க்கு விற்பனையானது. நேற்று (பிப்.26) சவரனுக்கு ₹200 குறைந்த நிலையில், இன்று (பிப்.27) ₹320 குறைந்து ₹64,080க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் இந்த வாரத்தில் கிராமுக்கு ₹3 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 27, 2025
சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மேல்முறையீடு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சீமான் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. அதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் ஆணையிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
News February 27, 2025
UPI மூலம் PF பணம். வந்தது ஒப்புதல்

PF பணத்தை GPay, PhonePe மாதிரியான UPI அப்ளிகேஷன்கள் மூலம் எடுப்பதற்கு CBT எனப்படும் அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து, பணிகளைத் தொடங்கியுள்ள NPCI, ஏப்ரல் இறுதியில் இத்திட்டம் அமலுக்கு வரும் என்று உறுதியளித்துள்ளது. அதேபோல, PF பணத்தை ATM மூலம் எடுக்கும் வசதியையும் அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
News February 27, 2025
பால் உற்பத்தியாளர் வங்கிக் கணக்கில் பணம்: அமைச்சர்

தமிழக அரசு வழங்கும் ஊக்கத் தொகை, பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பால்வளத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆவின் பால், தயிர், மோர், நெய், லஸ்ஸி, ஐஸ்க்ரீம் விற்பனையை அதிகரிக்கவும், பால் கொள்முதலை அதிகரிக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.