News February 27, 2025
2 நாளில் சவரனுக்கு ₹520 குறைந்த தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2ஆவது நாளாக சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து ஏற்றத்திலிருந்த தங்கத்தின் விலை புதிய உச்சமாக கடந்த 25ஆம் தேதி ₹64,600க்கு விற்பனையானது. நேற்று (பிப்.26) சவரனுக்கு ₹200 குறைந்த நிலையில், இன்று (பிப்.27) ₹320 குறைந்து ₹64,080க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் இந்த வாரத்தில் கிராமுக்கு ₹3 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 27, 2025
மார்ச் மாதப் பலன்: தன யோகம் கிடைக்கும் 4 ராசிகள்

மார்ச்சில் மீன ராசியில் சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், சனி, ராகு என 6 கிரகங்களின் சேர்க்கை நடப்பதால்: மேஷம்- 2வது வாரம் வரை சிறப்பாக இருக்கும் *மேஷம்- மாத நடுவில் அதிர்ஷ்டம் திரும்பும், சுயக்கட்டுப்பாடு அவசியம் *ரிஷபம்- வாய்ப்புகள் தேடிவரும், உறவுகள் சிறக்கும். பிற்பாதியில் ஏற்ற இறக்கம் *மிதுனம்- உறவுகள், பண விஷயத்தில் கவனம் தேவை, 2-ம் வாரத்தில் பண ஆதாயம் உண்டு. மாத இறுதியில் கவனம் தேவை.
News February 27, 2025
தமிழ்ல எழுதிட்டா அது தமிழ் ஆயிடுமா?

முன்பெல்லாம் ரயில்களுக்கு ‘வைகை exp’, ’பாண்டியன் exp’ என்று பெயரிடுவார்கள். இப்போது பாருங்கள். அந்த்யோதயா, சதாப்தி என்று இந்திப் பெயர்கள்தான் வைக்கப்படுகின்றன. அதேபோல, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ‘ஜன் அவுஷாதி’ என்று ஏதோ புரியாத மொழியிலேயே வருகின்றன. அதேபோல, இந்திப் பெயர்களை தமிழ் எழுத்துக்களால் எழுதினால் அது தமிழாகிவிடுமா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
News February 27, 2025
முட்டை கொள்முதல் விலை மீண்டும் குறைப்பு

மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் நாமக்கல் மண்டலத்தில் இருந்தே முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நிர்ணயம் செய்யும் விலை அடிப்படையில் பிற பகுதிகளில் முட்டை விற்கப்படுகிறது. இன்று அங்கு கொள்முதல் விலை 30 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.60ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் ரூ.5 – ரூ.5.50 வரை விற்கப்படுகிறது. உங்கள் ஊரில் முட்டை விலை என்ன?