News April 23, 2025
தோசை சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு

கேரளாவில் மசால் தோசை சாப்பிட்ட 3 வயது சிறுமி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ஹென்றி என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 19-ம் தேதி, அங்கமாலியில் உள்ள உணவகத்தில் மசால் தோசை சாப்பிட்டுள்ளார். வீடு திரும்பிய உடன் உடல்நலக் குறைவு ஏற்படவே, அனைவரும் ஹாஸ்பிடல் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒலிவியா (3) உயிரிழந்தார். இதற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
வயிறு உப்புசம் பிரச்னைக்கு எளிய தீர்வு!

இரைப்பை பாதையில் காற்றால் நிரம்பும்போது வயிறு உப்புசம் ஏற்படுகிறது. இதை சரி செய்வதற்கு சீரகம், ஏலக்காய், சோம்பு, ஓமம் போன்றவற்றை சம அளவில் எடுத்து இடிக்கவும். அதன் பிறகு அரை டீஸ்பூன் பொடியை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, 10 நிமிட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வாருங்கள். இதனால் இரைப்பை பாதையில் உள்ள காற்று குறைந்து வயிற்று உப்புசம் பிரச்னை தீர்க்கப்படும்.
News November 9, 2025
ரயில்வேயில் 2,569 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

ரயில்வேயில் 2,569 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை பொறியாளர், டெப்போ கண்காணிப்பாளர் பணிகளுக்கு துறை சார்ந்த டிப்ளமோ படித்தவர்கள் விண்ணபிக்கலாம். உலோகவியல் உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி பட்டப்படிப்பு அவசியம். 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் நவ.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முதல் நிலை, 2-ம் நிலை என கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும்.
News November 9, 2025
டாப்-7 சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்!

இந்திய திரையுலகில் விளையாட்டை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் டாப்-7 சிறந்த படங்களின் பட்டியலை கொடுத்துள்ளோம். இவற்றில் சில படங்களை நீங்கள் ஏற்கெனவே பார்த்திருக்கலாம். படங்களின் விவரத்தை SWIPE செய்து தெரிந்து கொள்வதுடன், பார்க்காதவற்றை தவறாமல் OTT-ல் பார்க்கவும்.


