News August 4, 2024

6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெஃப்ரி வாண்டர்சே

image

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ODI போட்டியில், இலங்கை வீரர் ஜெஃப்ரி வாண்டர்சே 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். சுழற்பந்து வீச்சாளரான அவர், ரோஹித், கில், ஷிவம் துபே, கோலி, ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் ஆகியோரது விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தினார். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய IND அணி, வாண்டசேவின் சுழலால் தற்போது, 241 ரன்களை துரத்துவதில் தடுமாறி வருகிறது.

Similar News

News January 24, 2026

1 வாரத்தில் கருவளையம் நீங்க செம்ம டிப்ஸ்!

image

அதிக Stress, டென்ஷனால் கண்ணுக்கு கீழ் கருவளையம் வந்துவிட்டதா? கருவளையம் வந்துவிட்டதே என எண்ணி மேலும் Stress ஆகுறீங்களா? கவலைய விடுங்க. இதனை எளிமையான முறையில் சரி செய்யலாம். உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து அந்த பேஸ்டை கருவளையம் இருக்கும் இடத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதை ஒரு வாரத்திற்கு செய்து வந்தால் கருவளையம் நீங்கும். SHARE.

News January 24, 2026

BREAKING: அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

image

சமீப காலமாக OPS ஆதரவாளர்கள் பலர் திமுக, அதிமுக என பிற கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுகவில் இருந்து விலகி OPS உடன் பயணித்துவந்த தர்மர் MP, மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார். சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் EPS முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகுவது OPS-க்கு நெருக்கடியாக அமைந்துள்ளது.

News January 24, 2026

இந்தியா மீதான கூடுதல் வரியை குறைக்க US திட்டம்

image

அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்புக்கு பின், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா பெருமளவு குறைத்துள்ளது. இது உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவின் வருவாயைக் குறைக்கும் US-ன் முயற்சிக்கு ஒரு வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா மீது விதித்த 25% கூடுதல் வரியை அமெரிக்கா குறைக்க வாய்ப்புள்ளதாக US நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசண்ட் உலகப் பொருளாதார மன்றத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!