News November 17, 2024
பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

1) உலகின் மிகப்பெரிய பவளப்பாறை சாலமன் தீவில் உள்ளது 2) TDS விரிவாக்கம்: Tax Deducted at Source 3) உலக வரலாற்றில் பழமையானதாக கருதப்படும் மரம் – பேரீச்சை மரம் 4) ரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவி – Spygmomano Meter 5) கிளியின் அறிவியல் பெயர் – சிட்டாசிஃபார்ம்ஸ் 6) ‘பரதகண்ட புராதனம்’ என்ற நூலின் ஆசிரியர் ராபர்ட் கால்டுவெல் 7) உலோகங்களின் அரசன் – இரும்பு 8) ரஷ்ய நாணயத்தின் பெயர் – ரூபிள்.
Similar News
News December 15, 2025
மெஸ்ஸிக்கு ₹200 கோடி; இந்திய கால்பந்துக்கு எவ்வளவு?

மெஸ்ஸியின் இந்திய பயணத்துக்கு ₹200 கோடி செலவானதாம். இவரின் 3 நாள் நிகழ்ச்சிக்கு இத்தனை கோடி செலவு செய்யும் நிறுவனங்களும், அரசும், இந்தியாவில் கால்பந்தை மேம்படுத்த இவ்வளவு செலவிட்டிருந்தால், இங்கேயும் மெஸ்ஸிகள் உருவாகி இருப்பார்கள். உலக தரவரிசையில் 142-வது இடத்தில் இருக்க மாட்டோம். கால்பந்து வளராததற்கு கிரிக்கெட்டை மட்டுமே குறை கூறாமல், வேறு வழியில் சிந்திக்க வேண்டியது இன்றைய தேவை. உங்க கருத்து?
News December 15, 2025
ALERT: இந்த வயதினருக்கு திடீர் மாரடைப்பு வர அதிக வாய்ப்பு

இந்தியாவில் 45 வயதுக்கு குறைந்தவர்களின் திடீர் மரணங்களில், மாரடைப்புதான் முதன்மையான காரணம் என Indian Journal of Medical Research தெரிவித்துள்ளது. இதில் பலர் வெளிப்புறத்தில் ஆரோக்கியமாக உள்ளனர். ஆனால், அதீத மன அழுத்தம், குறைவான தூக்கம், புகை–மது பழக்கம், அதிக சர்க்கரை, போதிய உடலுழைப்பு இல்லாமை, High BP, கண்டறியப்படாத இதய கோளாறுகள் ஆகியவையே திடீர் மாரடைப்புகளுக்கு காரணங்களாக அமைந்துள்ளது. உஷார்..!
News December 15, 2025
அதிமுகவில் போட்டா போட்டி போட்டு விருப்பமனு!

2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியது. முதல் நாளில் Ex அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் விருப்பமனு வாங்கிச் சென்றனர். அதேபோல், பல நிர்வாகிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிக்காக ஆர்வமுடன் மனுவை வாங்கிச் சென்றனர். சிலர், MGR, ஜெயலலிதாவின் வேடமணிந்து வந்து விருப்பமனு பெற்றுச் சென்றனர்.


