News April 7, 2024
கஞ்சாவை காணவில்லை! எலிகள் மீது குற்றச்சாட்டு

ஜார்க்கண்டின் தன்பாத் பகுதியில் 9 கிலோ கஞ்சா உள்பட 19 கிலோ போதைப்பொருள்களை 2018ஆம் ஆண்டு பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் பறிமுதல் செய்த போதைப்பொருள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட 9 கிலோ கஞ்சா உட்பட 19 கிலோ போதைப்பொருள்களையும் எலிகள் திண்றுவிட்டதாக போலீசார் பதில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
Similar News
News December 11, 2025
உணவு பாக்கெட்களில் சைவ, அசைவ குறியீடு அவசியம்

சிப்ஸ், முறுக்கு, ஊறுகாய் உள்ளிட்ட எல்லா உணவுப் பொருட்களின் பாக்கெட்களில் 12 வகையான தகவல்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. தயாரிப்பு தேதி, நிகர எடை, காலாவதி தேதி, ஊட்டச்சத்து, பேட்ச் எண், சைவ-அசைவ குறியீடு கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. தகவல்கள் இடம்பெறாவிட்டால் அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப்பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.
News December 11, 2025
மனைவியின் பெயரில் கார்.. இவ்வளவு நன்மைகளா?

புதிய காரை மனைவி பெயரில் பதிவு செய்து வாங்கும்போது சில சலுகைகள் கிடைக்கின்றன. பெண்களுக்கு அதிகாரமளித்தலை நோக்கமாக கொண்டு இச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. சாலை வரி 2% – 20% வரை குறைக்கப்படுவதால் ₹40,000 வரை சேமிக்கலாம். மனைவி பெயரில் எடுக்கப்படும் கார் லோனுக்கான வட்டி 0.25% – 0.50% வரை குறைக்கப்பட்டு, ₹1 லட்சம் வரை சேமிக்கலாம். ₹1.5 லட்சம் அசலிலும், ₹2 லட்சம் வரை வட்டியிலும் வருமான வரியில் குறையும்.
News December 11, 2025
சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும்.. அரசு அறிவிப்பு

மழை விடுமுறையை ஈடுசெய்ய புதுச்சேரியில் சனிக்கிழமை (டிச.13) பள்ளிகள் இயங்கும் என கல்வித் துறை அறிவித்துள்ளது. டிட்வா புயல் எதிரொலியாக, கடந்த வாரம் கனமழை கொட்டித் தீர்த்ததால் புதுச்சேரி, காரைக்காலில் சில நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டன. அதனை ஈடுசெய்யும் விதமாக சனிக்கிழமை பள்ளிகள் விடுமுறை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் இதேபோன்ற அறிவிப்பு வெளியாகலாம்.


