News August 22, 2024
₹1.20 லட்சம் கோடியை ஏப்பம் விட்ட மோசடிக்காரர்கள்

கடந்த 2020 முதல் GST உள்ளீட்டு வரிப்பயன் மோசடி மூலம், ₹1.20 லட்சம் கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதை GST புலனாய்வு இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது. இதனையடுத்து, போலி நிறுவனங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து அரசின் வருவாயை பெருக்க, கடந்த 16 ஆம் தேதி முதல் சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கு இந்த சோதனைகள் தொடரும் என்றும் கூறியுள்ளது.
Similar News
News November 12, 2025
குண்டுவெடிப்புக்கு மூளையாக விளங்கியவர் இவரா?

ஃபரீதாபாத்தில் டாக்டர்களை மூளைச்சலவை செய்து டெல்லி குண்டுவெடிப்பை நடத்தியதாக இமாம் இர்ஃபான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் அரசு ஹாஸ்பிடலில் பணிபுரிந்த இவர், பள்ளிவாசலுக்கு செல்வது வழக்கம். அங்கு வந்த மற்ற டாக்டர்களுடன் பழகி, அவர்களுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் கொள்கைகளை கற்பித்து மூளை சலவை செய்திருக்கிறார். இவருடன் தொடர்பில் இருந்தவர்கள்தான் வெடிப்பை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.
News November 12, 2025
சி.வி.சண்முகம் மீது பாயப்போகும் நடவடிக்கை

பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு, மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில் விழுப்புரத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், இலவசமாக ஆடு, மாடு, கொடுப்பது போல், ஆளுக்கு ஒரு பொண்டாட்டியையும் இலவசமாக கொடுப்பாங்க என்று அரசு வழங்கும் இலவசத்தோடு பெண்களையும் ஒப்பிட்டு அவர் சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது.
News November 12, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

கடந்த 2 நாள்களாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று மீண்டும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹100 குறைந்து ₹11,600-க்கும், சவரனுக்கு ₹800 குறைந்து ₹92,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை எதிரொலியால் இன்று விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைகீழாக மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


